கொரோனா தீவிரம் குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது… அமிதாப் பச்சன் அறிவுறுத்தல்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மக்கள் கொரோனா நெறிமுறைகளைக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சிலர் அலட்சியம் காண்பிப்பதால் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. எனவே அரசு மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. மேலும் திரைத்துறை பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
சில இடங்களில் கொரோனா தீவிரம் குறைந்து வந்தாலும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். பாதுகாப்பு நெறிமுறைகளை சரியாகக் கடைபிடியுங்கள். கைகளை கழுவுங்கள், முகமூடிகள் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு மக்கள் முன்வந்து உதவவேண்டும். நாம் தேவைப்படும் அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கைகளை சுத்தப்படுத்துங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். சுகாதாராக்குழு அறிவுத்தலின்படி நடந்துகொள்ளுங்கள்.” என்று முன்னர் வெளியிட்டிருந்த பதிவில் தெரிவித்திருந்தார்.