ராஷ்மிகா படத்திற்கு டைட்டில் மாற்றம்….புதிய பெயரை வெளியிட்ட படக்குழு

ராஷ்மிகா படத்திற்கு  டைட்டில் மாற்றம்….புதிய பெயரை வெளியிட்ட படக்குழு

நடிகர்‌ அமிதாப் – ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றார். அதன்பிறகு தெலுங்கு, இந்தி, தமிழ்,கன்னடம் என 4 மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ராஷ்மிகா படத்திற்கு  டைட்டில் மாற்றம்….புதிய பெயரை வெளியிட்ட படக்குழு

குறுகிய காலத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின்‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஜூனியர் என்டிஆருடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார்.

ராஷ்மிகா படத்திற்கு  டைட்டில் மாற்றம்….புதிய பெயரை வெளியிட்ட படக்குழு

தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அமிதாப்புடன் டெட்லி படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்த படத்தை விகாஷ் பஹல் இயக்குகிறார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. டெட்லிக்கு பதிலாக ‘குட்பாய்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 29ம் தேதி பிரம்மாண்ட செட்டில் துவங்கவிருக்கிறது.

Share this story