500 கோடிக்கு அருகில் ‘அனிமல்’ பட வசூல்!

photo

அனிமல் படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

photo

 அர்ஜுன் ரெட்டிபடம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘அனிமல்’. இந்தப்படத்தை பத்ரகாளி  பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கியுள்ளனர். படத்தில் அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா என நடித்துள்ளனர். படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

சுமார் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் ஒரு புறம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் படம் விரைவில் 500 கோடியை எட்ட உள்ளது. அதன்படி படம் நான்கு நாட்களில் ரூ 425 கோடி வசூலித்த நிலையில், ஐந்து நாட்களில் 500 கோடிக்கு அருகில் வந்துள்ளது, அதாவது படம் ரூ 481 கோடி வசூலித்துள்ளது. விரைவில் படம் 500 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story