பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்!?
இசையமைப்பாளர் அனிருத் புதிய பாலிவுட் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களுள் ஒருவர். ஒய் திஸ் கொலவெறிடி பாடல் மூலமாக உலகம் முழுதும் பிரபலமானார் அனிருத்.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் விக்ரம், D44, தளபதி 65 ஆகிய படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.
தற்போது அனிருத் புதிய பாலிவுட் படம் ஒன்றிற்கு இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனது படங்களில் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். இதுவரை வெளியாகியுள்ள அவரின் படங்களில் இடம் பெற்றுள்ள இசையை வைத்தே நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது இவர் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் அட்ரங்கி ரே படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஆனந்த் எல் ராயின் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் படத்தில் அனிருத் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.