குவென்டின் டரான்டினோவின் சூப்பர் ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் அனுராக் காஷ்யப்!

quentin-torontina-and-anurag-kashyap

ஹாலிவுட்டில் ஹிட் ஆன கில் பில் படத்தில் இந்தி ரீமேக்கில் க்ரித்தி சானோன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

குவென்டின் டரான்டினோ இயக்கத்தில் வெளியான கில் பில் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. டரான்டினோ படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறுபவை. தற்போது கில் பில் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரீமேக் உரிமையை நிகில் திவேதி வாங்கியுள்ளார்.

நடிகை க்ரித்தி சானோன் இந்த ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கில் பில் படத்தின் இந்தி ரீமேக்கை அனுராக் காஷ்யப் இயக்க உள்ளார். அவர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

க்ரித்தி சானோன் இதுவரை காதல் சம்பந்தப்பட்ட காட்சிளில் மட்டுமே நடித்து வந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் முழுநேர ஆக்ஷனில் களமிறங்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து க்ரித்தி உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, ​​க்ரித்தி சானோன் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this story