குவென்டின் டரான்டினோவின் சூப்பர் ஹிட் படம்... இந்தி ரீமேக் பணிகளைத் துவங்கிய அனுராக் காஷ்யப்!

ஹாலிவுட்டில் ஹிட் ஆன கில் பில் படத்தின் இந்தி ரீமேக் பணிகளை இயக்குனர் அனுராக் காஷ்யப் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் குவென்டின் டரான்டினோ இயக்கத்தில் வெளியான கில் பில் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. டரான்டினோ படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறுபவை.
தற்போது கில் பில் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டது. இந்தி ரீமேக் உரிமையை நிகில் திவேதி வாங்கியுள்ளார்.நடிகை க்ரித்தி சானோன் இந்த ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். கில் பில் படத்தின் இந்தி ரீமேக்கை அனுராக் காஷ்யப் இயக்க உள்ளார். அவர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துவரை காதல் சம்பந்தப்பட்ட காட்சிளில் மட்டுமே நடித்து வந்த க்ரித்தி சானோன் இந்தப் படத்தின் மூலம் முழுநேர ஆக்ஷனில் களமிறங்க உள்ளார்.
தற்போது அனுராக் இந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.