‘கஜினி 2’ படத்தை மீண்டும் கையிலெடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்... ஹீரோ யார் தெரியுமா ?

ghajini

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கஜினி 2’ படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் 'கஜினி'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையில் உருவான இப்படம் சூப்பர் ஹிட்டடித்து நல்ல விமர்சனங்களை பெற்றது. 

ghajini

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து இந்தியில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். தமிழை விட இந்தியில் மாபெரும் வெற்றிப்பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார். இது குறித்து பேச்சுவார்த்தையில் அமீர் கான் ஈடுபட்டுள்ளார். 

பாலிவுட் சமீபகாலமாக அமீர் கானின் திரைப்படங்கள் தோல்வி சந்தித்து வருகின்றனர். அதனால் சினிமாவில் இருந்து சில காலம் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார் அமீர் கான். அதேநேரம் அடுத்து நடிக்கும் படத்திற்கான கதையை கேட்டு வரும் நிலையில் எந்த கதையிலும் திருப்தியில்லை என கூறப்படுகிறது. அதனால் தான் கஜினி 2 வை கையிலேடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

Share this story