தனது மகனுக்கு ஜாமீன் கிடைத்தால் மகிழ்ச்சி.. வழக்கறிஞருடன் எடுக்கப்பட்ட ஷாருக்கானின் புகைப்படம் வைரல் !

தனது மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்துள்ள நிலையில் வழக்கறிஞருடன் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பலரும் கைது விசாரிக்கப்பட்டு வந்தனர். பூதாகரமாக வெடித்த இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. அதனால் ஆர்யன்கானுக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
ஏற்கனவே மூன்று ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார். அப்போது ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், எந்த ஒரு போதைப் பொருட்கள் கைப்பற்றப்படவில்லை என்று பலமான வாதங்களை வைத்ததால் ஜாமீன் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் 26 நாட்களுக்கு பிறகு ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைத்ததை ஷாருக்கான் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.