இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக்கானின் மகன்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ?

aryan khan

 பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்  ஷாருக்கான். இவரது‌ மூத்த மகனான ஆர்யன் கான், தந்தை போன்று நடிப்பில் ஆர்வம் இல்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார். உண்மையில், ஆர்யன் கானுக்கு படங்களில் நடிப்பதில் ஆர்வமில்லை. மாறாக திரைப்படங்கள் இயக்குவதில் அதிகம் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. 

aryan khan

ஆர்யன் கானுக்கு இயக்குனராகவும், எழுத்தாளராகவும் ஆகவேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. அதனால் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஆர்யன் கான் ஈடுப்பட்டு வந்தார். ஆனால் அதற்கு கடந்த ஆண்டு அவரை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியே வந்தார்.‌

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர் ஒன்றை ஆர்யன் கான் இயக்கவுள்ளார். 'ஸ்டார்டம்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது.‌பாலிவுட் சினிமாவின் நடக்கும் சில விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

Share this story