‘ஷாருக்கனுடன் இணைந்து ஆட்டம் போட்ட அட்லீ’ - வைரல் வீடியோ!

photo

 ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் படமாக  தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. டிரைலர், போஸ்டர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது அந்த வகையில் தற்போது ஃபஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான ‘வந்த எடம்’ பாடலின்  மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

வருகிற  செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  ஜவான் படம்  வெளியாக உள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்  முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில்  படத்தின் முதல் பாடலாக ஷாருக்கனின் அட்டகாசமான ஆட்டத்தில் வெளியான ‘வந்த எடம்’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இயக்குநர் அட்லீ ஷாருக்கனுடன் இணைந்து சிவப்பு நிற சட்டையில் ஆட்டம் போடுகிறார், தொடர்ந்து நடனம் கற்று தருவது, இந்த பாடல் எப்படி படமாக்கப்பட்டது என்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது.

Share this story