ஷாருக் கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் புதிய பட டீசர் அப்டேட்!
அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் டீசர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
அட்லீ தற்போது ஷாருக் கான் நடிப்பில் இந்தியில் புதிய படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஷாருக் கான் தயாரிக்கிறார்.
நயன்தாரா இந்தப் படத்தில் இன்வெஸ்டிகேஷன் அதிகாரியாகவும் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் டீசர் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியகியுள்ளது. 'ஜவான்' படத்தின் டீசர் 1.34 நிமிடங்கள் நீளம் கொண்டுள்ளது. டீசருக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது