ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் ?.. அட்லி படத்தின் புதிய அப்டேட்
ஷாருக்கான் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அட்லி, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஒரு கேரக்டரில் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார். இரு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சானியா மல்ஹோத் ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ராணா டகுபதி, யோகிபாபு, ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிரூத் இணைந்து இசையமைக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வரும் இப்படத்தில் முழுக்க முழுக்க தென்னிந்திய தொழில் நுட்ப கலைஞர்களே பெரும்பாலும் பணியாற்றி வருகின்றனர். ரூபாய் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராணுவம் தொடர்பாக படமாக இப்படம் உருவாகவுள்ளதால் படத்திற்கு ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணையவுள்ள நடிகர் விஜய், ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

