பாலிவுட்டில் அடிவாரத்தை பலப்படுத்தும் அட்லீ

பாலிவுட்டில் அடிவாரத்தை பலப்படுத்தும் அட்லீ

கோலிவுட் திரையுலகில் ஆர்யா -  நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் வழியாக கோலிவுட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு இருவரின் கூட்டணியிலும் தெறி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் மீண்டும் விஜய்யுடன் அட்லீ மற்றொரு படத்தை இயக்கினார். இதையடுத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார்.  பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். 

இதனால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குநர் அட்லீ, சமீபத்தில் மும்பையில் வீடு ஒன்றை வாங்கினார். இந்நிலையில், பாலிவுட்டில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள அட்லீ, மும்பையில் 40 கோடி ரூபாய் செலவில், புதிய அலுவலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 

Share this story