'பொன்னியின் செல்வன்' படத்தில் பேபி சாரா என்ன கதாபாத்திரம் தெரியுமா!?

'பொன்னியின் செல்வன்' படத்தில் பேபி சாரா என்ன கதாபாத்திரம் தெரியுமா!?

தமிழில் “தெய்வத்திருமகன்” படத்தின் மூலம் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. விக்ரம்,கதாநாயகனாக நடித்திருந்த படத்தில் அவருக்கு குழந்தையாக சாரா நடித்திருப்பார். இவர்களது நடிப்பில் கண் கலங்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு எமோஷனல் ஆக நடிக்க தெரிந்தவர் சாரா. அடுத்ததாக நடித்த “சைவம்” படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார். இந்த சிறு வயதிலேயே பல விருதுகளையும் பெற்றார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் பேபி சாரா என்ன கதாபாத்திரம் தெரியுமா!?
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை  இயக்கி வருகிறார். இப்படம் எழுத்தாளர் “கல்கி” எழுதிய “பொன்னியின் செல்வன்” கதையின் சினிமா வடிவமாகும். பல இயக்குனர்களின் கனவு,இத்திரைப்படம் என்ற சொல்லலாம். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தில் இந்திய நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, த்ரிஷா போன்றோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நம்ம பேபி சாராவும் நடித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் பேபி சாரா என்ன கதாபாத்திரம் தெரியுமா!?
 
பொன்னியன் செல்வனில் ஐஸ்வர்யா ராய்,”நந்தினி” என்ற கதாபாத்திரத்தில் நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளார். இவரின் சிறுவயது கதாபாத்திரமாக பேபி சாரா நடிக்கவுள்ளார். பரபரப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் முடிந்தபின் படப்பிடிப்பு தொடரும் எனவும் அதில் பேபிசாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது. இப்படத்தை பிரபலமான லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.மணிரத்னம் அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைபுயல்A.R.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒட்டுமொத்த இந்தியாவே இப்படத்தினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. நிச்சயமாக உலகத்தரத்தில் இப்படம் உருவாகிறது என்பதற்கு படக்குழுவினரே சான்று.
-மா.மணிகண்டன்
 

Share this story