ஊழல் செய்த இந்தியத் தொழிலதிபர்கள் பற்றிய வெப் சீரிஸ்… ஒளிபரப்ப ஒப்புதல் அளித்த நீதிமன்றம்!
பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இந்திய தொழிலதிபர்கள் தொடர்பான வெப் தொடரை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பல சர்ச்சைகளில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லயா, வைர வியாபாரி நிரவ் மோடி, சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மற்றும் சகாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய் உள்ளிட்டோர் குறித்த வெப் தொடரை பேட் பாய் பில்லியனர்ஸ் இந்தியா (Bad Boy Billionaires – India) என்ற பெயரில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருந்த நிலையில், பீகார் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு கடந்த சனிக்கிழமை விலக்கப்பட்ட நிலையில், சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜுவை தவிர மற்ற மூவரின் வெப் தொடரை நெட் பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வெப் சீரிஸில் விஜய் மல்லையாவின் தொடர் “தி கிங் ஆஃப் குட் டைம்ஸ்” (The King of Good Time,- நல்ல நேரத்தின் அரசர்) என்ற பெயரிலும், நீரவ் மோடி குறித்த குறித்த தொடர் டைமண்ட்ஸ் ஆர் நாட் பார்எவர் (Diamonds Aren’t Forever- வைரங்கள் ஒருபோதும் இருந்ததில்லை) என்ற பெயரிலும், சுப்ரதா ராயின் கதை ‘உலகின் மிகப்பெரிய குடும்பம்’ (The World’s Biggest Family) என்ற பெயரிலும் வெளியாக இருந்தது.