புற்றுநோயால் உயிருக்கு போராடும் பிரபல நடிகை... மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி !

Aindrila Sharma

பிரபல பெங்காலி நடிகையான ஐந்த்ரிலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்காலி மொழியில் பிரபல நடிகையான இருப்பவர் ஐந்த்ரிலா. போலே பாபா பர் கரேகா, ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இரண்டு முறை சிகிச்சை பெற்று அந்நோயிலிருந்து குணமடைந்திருந்தார். 

Aindrila Sharma

இதையடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்த ஐந்த்ரிலா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹவுரா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் பல கட்டிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். 

தற்போது கோமாவில் இருக்கும் அவரை, வென்டிலேட்டரில் உதவி கண்காணித்து வருகின்றனர். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஐந்த்ரிலா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

 

Share this story