இரண்டு முறை அடுத்தடுத்து மாரடைப்பு... திடீரென உயிரிழந்த நடிகை !

Aindrila-Sharma

 பிரபல நடிகை ஒருவர் அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போலே பாபா பர் கரேகா, ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி உள்ளிட்ட படங்கள் பிரபலமானவர் நடிகை ஐந்த்ரிலா. பெங்காலி நடிகையான இவர், இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்த ஐந்த்ரிலா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Aindrila-Sharma

ஹவுரா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் பல கட்டிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கோமாவிற்கு சென்ற அவரை, வென்டிலேட்டரில் உதவி கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் மண்டை ஓட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிங் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. ஆனால் அதற்குள் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு கோமாவிலேயே உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story