சிக்கலில் மாட்டிக் கொண்ட ரன்வீர்... தொடரும் நிர்வாணப்பட சர்ச்சை !

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். தனித்துவமான குண்தியங்களுக்கும், ஆடை அலங்காத்திற்கும் பெயர் பெற்ற இவர், எப்போதும் வித்தியாசமானவற்றை செய்துக்கொண்டே இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட நிர்வாண போஸ் புகைப்படங்கள் திரையுலகை அதிர வைத்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் மற்றொரு புறம் ரன்வீருக்கு ஆலியா பட், வித்யா பாலன், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். பூதாகரமாக வெடித்துள்ள இந்த பிரச்சனைக்கு ஒரு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த விஷயம் இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு ஒரு நிர்வாண படம் எடுத்து தரும்படி பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் இந்த கோரிக்கை விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி ரன்வீருக்கு மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது.