“அட்லி படத்தில் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்” - ‘ஜவான்’ குறித்து ஷாருக்கான் கருத்து !

jawaan

 அட்லியின் ‘ஜவான்’ படத்தில் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் பாலிவுட் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கானின் மனைவி தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

jawaan

சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஷாருக்கான், இதுவரை ஜவான் போன்று கதைக்களம் உள்ள படங்களில் நடித்ததில்லை. அட்லியின் முந்தைய மாஸ் ஹிட் படங்கள் போன்று, இந்த படத்திலும் அட்லியுடனான கெமிஸ்ரி சிறப்பாக உள்ளது. 

jawaan

இந்த படத்தில் அட்லி சிலவற்றை சிறப்பாக கொண்டுவர முயற்சித்து வருவதாகவும், நயன்தாரா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், இதுபோன்ற படங்களில் நடிப்பதை பெருமையாக உணர்வதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

Share this story