அஜய் தேவ்கனின் ‘மைதான்’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜய் தேவ்கனின் ‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைதான்’. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை “பதாய் ஹோ” பட இயக்குநர் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கியுள்ளார். சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகியுள்ள இப்படத்தில் பிரியாமணி, கஜ்ராஜ் ராவ் மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா காரணமாக தாமதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு நிறைவுபெற்று இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக அதிகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளதால் இந்த பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. .
இந்த தசரா பண்டிக்கையொட்டி வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரானா காரணமாக பணிகள் நிறைவுபெறாததால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘மைதான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது.