பிரபல இந்தி நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி

பிரபல இந்தி நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி

பிரபல இந்தி நடிகர் ராகேஷ் பேடி. மும்பையில் வசித்து வரும் அவருக்கு பூனேவில் ஒரு வீடு இருக்கிறது. அதை விற்பதற்காக ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்டு ஆதித்யார குமார் என்பவர் பேசினார். தான் ராணுவத்தில் பணிபுரிவதாக கூறிய அவர், வீட்டின் புகைப்படங்களை கேட்டுள்ளார். இதை நம்பி அனுப்பியுள்ளார் பேடி. மறுநாள் பேசிய அவர் தனது மூத்த அதிகாரிக்கு வீடு பிடித்திருப்பதாகவும் 87 லட்சத்திற்கு அதை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். 

பின்னர் பேடிக்கு ஒரு ரூபாயை அனுப்பிய அவர், சரிபார்க்க அனுப்பினேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் அனுப்ப வேண்டும். அதற்கான வங்கி தகவல்களை அனுப்புமாறும் கேட்டுள்ளார். பேடியும் கொடுத்துள்ளார். ஆனால், அவரது கணக்குக்கு பணம் வரவில்லை. பிறகு அவரது மனைவியின் வங்கி கணக்கை கேட்டுள்ளார். அவரும் கொடுத்தார். திடீரென அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே போன் செய்த அந்த நபர், தவறுதலாக நடந்துவிட்டது. திருப்பி அனுப்பிவிடுகிறேன். அதற்கான நடைமுறைக்காக 25 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் என கூறியுள்ளார். திருப்பி அனுப்புவதாக கூறிய அவர் செல்போனை ஆஃப் செய்துவிட்டுள்ளார். பிறது தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி அவர் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Share this story