பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்
Fri Apr 04 2025 7:04:36 AM

பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார். பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.