செல்பி எடுக்க வந்த ரசிகர்... ஷாருக்கான் செய்த காரியத்தால் அதிர்ச்சி !

sharukhkhan

செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை நடிகர் ஷாருக்கான் தட்டிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமா பிரபலங்கள் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் அலாதி பிரியம்தான். அவர்களை நேரில் பார்த்தாலே ஒரு செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் போட வேண்டும் என்பது ஒரு ரசிகர்கள் இயல்பான ஆசை. அப்படி பிரபலங்களுடன் செல்பி எடுக்க சென்று சேதாரத்தை சந்திக்கும் ரசிகர்கள் தான் இங்கே ஏராளம். அப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

sharukhkhan

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகராக ஷாருக்கான், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த ரசிகனின் கையை தட்டி விட்டுவிட்டு ஷாருக்கான் செல்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது. ஒரு செல்பிக்கு அனுமதித்தால் அந்த ரசிகர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் பிரபலங்கள் அனுமதியில்லாமல் செல்பி எடுப்பது தவறு. அதனால் இதுபோன்ற சர்ச்சைகள் வெடிக்கிறது என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்க்கது. 


 

Share this story