குழந்தையின் பெயரை அறிவித்த ஆலியா... கொண்டாடும் ரசிகர்கள் !
நடிகை ஆலியா தனது பெயரை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் ரன்வீர் கபூர் மற்றும் ஆலியா பட். சில ஆண்டுகளாக காதலித்த வந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். பிரம்மாண்டமான நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தனர்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியட் பட் அறிவித்தார். மருத்துவமனையில் ரன்வீருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஆலியா பட்டுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இதையடுத்து ஆலியா பட் மற்றும் ரன்வீர் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு சூப்பரான பெயர் ஒன்றை ஆலியா பட் வைத்துள்ளார். அதன்படி தனது குழந்தைக்கு ராஹா என்று ஆலியா பெயர் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆலியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.