பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ விபத்தில் படுகாயம்

பாலிவுட் நடிகை நடிகை பாக்யஸ்ரீ-க்கு விளையாடும் போது விபத்தில் சிக்கி நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ. இந்தியில் சல்மான் கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பயோபிக்’கான ‘தலைவி’யில் ஜெயலலிதாவின் தாயாக நடித்திருந்தார். இவர், சமீபத்தில் ‘பிக்கில் பால்’ (டென்னிஸ், பாட்மின்டன் விளையாட்டுகளின் கலவை) விளையாட்டில் பங்கேற்றார். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் அவர் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, நெற்றியில் 13 தையல் போடப்பட்டது. தற்போது உடல்நிலை சீராக இருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை பாக்யஸ்ரீ மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.