14 மாதங்களாக நரக வேதனை - வாழ்க்கை இழந்து நிற்கும் பிரபல நடிகை !

 Flora Saini

14 மாதங்கள் நரக வேதனை அனுபவித்ததாக தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை புளோரா. விஜய்காந்தின் ‘கஜேந்திரா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு குஸ்தி, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 Flora Saini

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் பிரபலமாக மாறிய அவர், பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் 14 மாதங்கள் நரக வேதனை அனுப்பவித்தாக பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் 20 வயதில் சினிமாவிற்கு வந்த நான், இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அதேபோன்று சில விளம்பரங்களில் நடித்துள்ளேன். பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கையே பறிபோனது. அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். எனது அந்தரங்க உறுப்புகளில் அடித்து காயப்படுத்தினார். 14 மாதங்கள் என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். ஆனால் தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று கூறினார்.  

Share this story