கொரானாவிலிருந்து முழுமையாக குணமடைந்த பிரபல பாலிவுட் நடிகை.

கொரானா தொற்றிலிருந்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்தியாவின் கொரானா 2வது அலையின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 4 லட்சம் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த 24 நேரத்தில் 4 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இதற்கிடையே நம் அறிந்த முகங்களாக இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமீர் கான், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தனர். இதேபோன்று பல நடிகர், நடிகைகள் கொரானா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரானா வழிமுறைகளை பின்பற்றி வீட்டு தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகை கங்கனாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

