புதிய சிக்கலில் பாலிவுட் நடிகை கங்கனா… சர்ச்சையாகும் படத்தின் அறிவிப்பு…
போர் வீராங்கனை கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளதால், பாலிவுட் நடிகை கங்கனா புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் கங்கனா ரனாவத், ஜெயம் ரவியின் ‘தாம்தூம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் இவர் நடித்த ‘குயீன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் வசூலை வாரி குவித்தது. தற்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் தலைவி படத்து வருகிறார். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்தியில் முன்னணி கதாநாயகி அந்தஸ்து பெற்றுள்ள கங்கனா, தொடர்ந்து நிறையப்படங்களில் கைவசம் வைத்தள்ளார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா சர்ச்சை கருத்துக்களை கூறி வருகிறார். விவசாயிகள் போராட்டத்தில்கூட அவர் கூறிய கருத்து விவாத பொருளாக மாறியது.
இப்படி பல சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் கங்கனா ரனாவத், புதிய புகார் ஒன்றில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கங்கனா காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். இதற்கு எழுத்தாளர் ஆஷிக் கவுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், டிட்டா என்ற பெயரில் இந்த கதையை நான் எழுதியுள்ளேன். இந்த புக்கத்தை கதையாக்க பல முறை கங்கனாவை அணுகியும், மின்னஞ்சலில் சில பகுதிகளை அனுப்பியும் இருக்கிறேன். எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி, திரைப்படமாக எடுப்பது நியாயமற்றது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.