சூட்டை கிளப்பும் கியாரா அத்வானி... ஸ்டன்னிங் போட்டோஷூட்
பாலிவுட்டின் நாயகி கியாரா அத்வானியின் ஸ்டன்னிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இந்தியில் பிசியாக நடித்து வந்த அவர், தற்போது தென்னிந்திய மொழியான தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘புக்லி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தின் நடித்து அறிமுகமானார். அதன்பிறகு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’, எம்.எஸ்.தோனி உள்ளிட்ட சில படங்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.
தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் கியாரா அத்வானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் பாலிவுட் இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கியாரா அத்வானி, தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் தனது போட்டோஷூட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஓவர் கிளாமரில் இருக்கும் ஸ்டன்னிங் போட்டோஷூட்டை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.