திரைப்படமாகும் மீனாகுமாரியின் வாழ்க்கை... அவரின் கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா ?

meena kumari

 பழம்பெரும் நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் மீனா குமாரி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு கதாநாயகியாக மாறிய அவர், பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற பாலிவுட்டின் சூப்பர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். 

meena kumari

இதுவரை சுமார் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சோகமானவை. அதனால் ‘டிராஜிடி குயின்’ என்று அழைக்கப்பட்டார். இப்படி புகழின் உச்சிக்கு சென்ற அவர், தனது 39 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

இந்நிலையில் நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் மீனா குமாரி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல ஆடை வடிவமைப்பாளராக மனிஷ் மல்கோத்ரா தயாரித்து இயக்கவுள்ளார். அவர் தமிழில் சிவாஜி, எந்திரன், புலி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Share this story