எம்.பி.ஐ மணம் முடித்தார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா

எம்.பி.ஐ மணம் முடித்தார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா

பிரியங்கா சோப்ராவின் தங்கையும், பாலிவுட் நடிகையுமான பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவுக்குத் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை மணமக்கள் வெளியிட்டுள்ளனர். 

எம்.பி.ஐ மணம் முடித்தார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா

இவர்களது திருமண கொண்டாட்டங்கள் ராஜஸ்தான், உதய்பூரில் நடைபெற்றது. பரினீதி- ராகவ் இருவரும் தங்களது குடும்பத்துடன் உதய்பூர் வந்தடைந்தனர். மணமக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வரவேற்கும் விதமாக உதய்பூர் ஏர்போர்ட்டின் ஒரு பக்கத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நடனக்கலைஞர்களோடு அசத்தல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஹல்தியைத் தொடர்ந்து பஞ்சாப் முறையில் நடனமும், மதிய விருந்தும் இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர். 

எம்.பி.ஐ மணம் முடித்தார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா

தற்போது திருமணப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பரினீதி சோப்ரா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
 

Share this story