வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பாலிவுட் நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து !

வாடகை தாய் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழிலும் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு உலக முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து அவர், தன்னைவிட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோனாஸை திருமணம் செய்துக்கொண்டார். திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்கள், தற்போது ஹாலிவுட்டிலும் ஜொலித்து வருகின்றனர். அவ்வெவ்போது ஊர்சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வாடகை தாய் முறையில் ஒரு அழகான தேவதைக்கு தாயாகியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இது குறித்து மொபைலில் ஸ்டேட்டஸ் வைத்துள்ள அவர், நாங்கள் வாடகை தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோராகியிருப்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இந்த நிகழ்வு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.