ஆண் குழந்தைக்கு அம்மா ஆனார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்!
பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனம் கபூர். பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக அம்பிகாபதி படத்தில் நடித்திருந்தார்.
சோனம் கபூர், ஆனந்த் ஆஜா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த சோனம் கபூருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சித் தகவலை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
" குனிந்த தலையுடனும் இதயத்துடனும் எங்கள் அழகான ஆண் குழந்தையை நாங்கள் வரவேற்றோம். இந்த பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இது ஆரம்பம் மட்டுமே வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை யாவரும் அறிவோம். சோனம் மற்றும் ஆனந்த்.’" என்று தெரிவித்துள்ளார்.