நெகட்டிவ் விமர்சனங்களை பெறும் ‘பிரம்மாஸ்திரா’... ஆனா கலெக்ஷன் அல்லுது !
‘பிரம்மாஸ்திரா’ படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த 9-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜூனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார். மூன்று பாகங்களாக உருவாக திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
இந்த படம் வெளியாகி தற்போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் 160 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் உலகம் முழுவதும் 75 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. நெகட்டிவ் விமர்சனத்திலும் இந்த படம் வசூலிப்பது படக்குழுவினரை ஆச்சர்யமடைய செய்துள்ளது.