துபாயில் ஜொலித்த ஷாருக்கான்… பிறந்தநாளுக்கு கிடைத்த பிரம்மாண்ட பரிசு!

நேற்று (நவம்பர் 2) ஷாருக்கான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து துபாயின் பிரமாண்டமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் ஷாருக் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கவுரவித்துள்ளனர்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து நேற்று சமூக வலைத்தளம் வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்தது. கடந்த சில வருடங்களாக துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடம் ஷாருக்கானின் பிறந்தநாளில், தங்களது கட்டத்தில் வண்ண விளக்குகள் மூலம் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கவுரவித்து வருகின்றனர்.
அதேபோல நேற்றும் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஷாருக்கானின் பெயர் வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக ஜொலித்தது. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷாருக்கான், “உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான திரையில் என்னைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அடுத்த படத்திற்கு முன்பே எனது நண்பர் முகமது அலபார் என்னை மிகப்பெரிய திரையில் வைத்திருக்கிறார். நன்றி & உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். துபாயில் எனது சொந்த விருந்தினராகி உள்ளேன். என் குழந்தைளுக்கு இது மிகவும் பிடித்தது. நானும் இதை நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஷாருக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. எனவே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளுக்காக ஷாருக் அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர்.

