‘சிட்டாடெல்’ வெப் தொடரை நிறைவு செய்த சமந்தா.. லைப் டைம் கேரக்டர் என நெகிழ்ச்சி !

samantha

‘சிட்டாடெல்’ வெப் தொடரில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகை சமந்தா நிறைவு செய்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையான இருந்த அவர், ‘பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். தற்போது அந்த தொடரின் இயக்குனர்களான  ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கும் ‘சிட்டாடெல்’ வெப் தொடரில் நடித்து வருகிறார். 

இது ஆங்கிலத்தில் ரூஸ்சோ சகோதரர்கள் இயக்கிய ‘சிட்டாடெல்’ என்ற ஆங்கில வெப் தொடரின் இந்தி பதிப்பாக உருவாகி வருகிறது. இ‌ந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். சமந்தாவுடன் இணைந்து இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடிகை சமந்தா நடித்துள்ளார். 

samantha

சமீபத்தில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்கியது. அதில் 80 மற்றும் 90-களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சமந்தா மற்றும் வருண் தவான் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில் ‘சிட்டாடெல்’ வெப் தொடரில் தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதோடு இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய கடினமான நேரங்களை சிறப்பாக எதிர்கொள்ள துணை நின்ற படக்குழுவினருக்கு நன்றி. இந்த வெப் தொடரில் என் லைஃப் டைம் கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர்களுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு சமந்தா சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அமெரிக்கா செல்லும் அவர், ஒரு வருடத்திற்கு படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. 

தன்னுடைய லைஃப்டைம் கேரக்டரை தனக்கு கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்த சமந்தா, அடுத்ததாக தனக்காக இவர்கள் சிறப்பான கேரக்டரை உருவாக்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பிற்காக அடுத்த 6 மாத காலங்கள் சமந்தா சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Share this story