சர்ச்சை நடிகை ‘உர்ஃபி ஜாவத்’ கைது! - என்ன காரணம் தெரியுமா?

photo

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவத். இவர் ஆள் பாதி ஆடை பாதி என்பது போல அரைகுறை ஆடையணிந்து சர்ச்சை நடிகையாக வலம் வந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் இன்று காலை நடிகை உர்ஃபி ஜாவத்தை இரண்டு பெண் காவலர்கள் கைது செய்துள்ளனர்.


அதாவது காலையில் காபி குடிக்க கடைக்கு வந்த உர்ஃபியை பொது இடத்தில் முழு முதுகும் தெரியும் படி அரைகுறையாகவும், ஆபாசமாகவும் ஆடையணிந்து வந்த காரணத்திற்காக அவர்கள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

Share this story