தடைகளை மீறி 41 வயதில் கிரிக்கெட் வீரர் ஆனவரின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

Kaun-3

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. 

வேலை மற்றும் திருமணத்தை விட கிரிக்கெட் தான் முக்கியம் என்ற போராடி வென்ற அசாதாரண மனிதரின் உணர்ச்சிகரமான பயணம் திரைப்படமாக உருவாகிறது.  சர்வதேச, முதல் தர கிரிக்கெட் என எந்தப் போட்டியிலும் விளையாடாமல் பிரவின் தாம்பே தனது 41 வயதில் ஐபிஎல் அரங்கில் அறிமுகமாகி பந்துவீச்சில் ஜொலித்தார். அவரது வெற்றி வயது ஒரு தடையல்ல என்பதை பறை சாற்றியது. அவர் தற்போதும் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிவருகிறார் . 

kaun

இந்தப் படத்தில் பிரவின் தாம்பேவின் கதாபத்திரத்தில் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ளார். இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 1 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Share this story