பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு; பிரபலங்கள் வாழ்த்து

பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு 'தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் 1969-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவுக்கு பின்னர், சினிமாவுக்கு சென்ற அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர், விஸ்வரூபம் 2 படத்தில் கமலுக்கு அம்மாவாக அவர் நடித்திருப்பார். விருது வென்ற வஹிதாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story