தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா..?
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டியுள்ளனர்.
தீபாவளியில் முன்னிட்டு தங்களது பெண் குழந்தையின் புகைப்படத்தை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், "துவா என்றால் பிரார்த்தனை என்று அர்த்தம். ஏனென்றால் எங்கள் பிரார்த்தனைகளுக்கான பதில் அவள். எங்கள் இதயம் முழுவதும் அன்பும் நன்றியுணர்வும் நிரம்பியுள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.