மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே!

deepika-padukone3

நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாக இருக்கும் இரண்டாவது ஹாலிவுட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே கடந்த 2017ஆம் ஆண்டு வின் டீசல் உடன் XXX: Return of Xander Cage என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்திய அளவில் பிரபலமாக இருந்த தீபிகா அந்தப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.பிரியங்கா சோப்ராவை அடுத்து ஹாலிவுட் வரை சென்ற இந்திய நடிகை என்ற பெருமை பெற்றார் தீபிகா படுகோனே.

deepika-padukone-3

தற்போது தீபிகா தான் இரண்டாவதாக நடிக்க இருக்கும் புதிய ஹாலிவுட் படத்தை அறிவித்துள்ளார். மேலும் அந்த படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story