பிவி சிந்துவுடன் வெறித்தனமாக விளையாடிய தீபிகா படுகோனே... வைரலாகும் புகைப்படங்கள்!

பிவி சிந்துவுடன் தீபிகா படுகோனே விளையாடியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை தீபிகா படுகோன் சமூக ஊடகங்களில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுடன் விளையாடிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். மூத்த பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள் தான் தீபிகா. எனவே அவரும் நன்றாக பேட்மிண்டன் விளையாடக்கூடியவராகத் தான் இருப்பார். எனவே பிவி சிந்துவிடம் அவர் தனது திறமையைக் காண்பித்திருக்கக் கூடும். "என் வாழ்க்கையில் ஒரு வழக்கமான நாள் ... பிவி சிந்துவுடன் எனது கலோரிகளை எரிக்கிறேன். என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
தீபிகா மற்றும் பிவி சிந்து சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர் .இதையடுத்து நேற்று ஒன்றாக விளையாடியுள்ளனர். எனவே பிவி சிந்து வாழ்க்கை திரைப்படமாக உருவாகலாம், அதில் தீபிகா படுகோனே நடிக்கலாம் என்று செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது அதை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!