கவர்ச்சி உலகத்தையே காட்டும் தீபிகா படுகோன்.. ரசிகர்கள் வரவேற்பு !
ஆரஞ்சு நிற உடையில் தீபிகா படுகோன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். 2006-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'ஐஸ்வர்யா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'ஓம் ஷாந்தி ஒம்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தார். பின்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தி ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி வரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்வீரும், தீபிகாவும் இணைந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ‘83’ படத்திலும் இணைந்து நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றனர்.
இந்நிலையில் கிளாமர் கலக்கி வருகிறார் தீபிகா படுகோன். அந்த வகையில் கிளாமர் கலக்கும் ஆரஞ்சு நிற உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.