தாயார் இறந்த நிலையிலும் மற்றொரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு நெகிழ வைத்த அக்ஷய் குமார்!

akshay-kumar-3434

தனது தாயார் காலமான நிலையிலும் அக்ஷய் குமார் மற்றொரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக லண்டனில் இருந்த அக்ஷய் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மும்பை திரும்பினார். இந்நிலையில் துரதிருஷ்டவசமாக தாயார் காலமானார். 


"எனது அம்மா தான் எனது எல்லாமும். அவர் இன்று காலை அமைதியான முறையில் உலகை விட்டு நீங்கி, தந்தையுடன் இணைந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தார். அக்ஷய் குமார் தாயார் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

akshay

இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் எல் ராயின் தாயாரும் காலமாகியுள்ளார். அக்ஷய் குமார் அந்த இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டுள்ளார். தனது தாயார் காலமான நிலையிலும் அக்ஷய் குமார் மற்றொரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story