ரிலீசுக்கு தயாராகும் தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் ,ஹாலிவுட் என பலமொழி ரசிகர்களை நாளுக்கு நாள் தன்வசம் ஈர்த்து வருகிறார்.
‘ஷமிதாப்’, ‘ராஞ்சனா’ உள்ளிட்ட ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த தனுஷிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் தனுஷ் , ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு, இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் தனுஷுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஹிருத்திக் ரோஷனுக்கு பதிலாக அக்ஷய் குமார் நடிப்பில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் தற்போது ‘அட்ரங்கி ரே’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.
ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மதம் மதுரையில் தொடங்கி தற்போது முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது.
இதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.