பாலிவுட்டில் பிசியாகும் இயக்குனர் அட்லி... ‘ஜவான்’ -ஐ தொடர்ந்து புதிய படத்தை இயக்குகிறார் !

atlee

ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லி. ‘ராஜாராணி’ படத்தின் மூலம் பிரபலமான அவர், மெர்சல், தெறி, பிகில் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அட்லி, தற்போது ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் படம் வெளியாகவுள்ளது. 

atlee

இந்த படத்தை முடித்து தற்போது வருண் தவானை வைத்து புதிய படம் ஒன்றை அட்லி இயக்கவுள்ளார். நடிகர் வருண் தவான் பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வருபவர். இந்த படத்தை கபீர் சிங், பூல் புலைய்யா உள்ளிட்ட படங்களை தயாரித்து கெடானி தயாரிக்கவுள்ளார். வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவிருக்கிறது. 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியில் பிசியான இயக்குனராக அட்லி மாறி வருவது சினிமாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

Share this story