பொது மக்களுக்கு அனுமதி இல்லை!.- போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தேமுதிக அலுவலகம்.

photo

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் மாலை அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகிறது.

photo

உடல்நல குறைவால காலமான விஜயகாந்தின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மதியம் 2.15 மணிக்கு அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்காக தேமுதிக அலுவலக பார்க்கிங் பகுதியில் ஜேசிபி வாகனம் மூலமாக குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. மாலை 4.45 மணிக்கு கேப்டனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

photo

குறிப்பாக அலுவலகத்திற்குள் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கின் போது எந்த வித அசம்பாவிதங்களும் நடக்க கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 72 குண்டுகள் முழங்கள் கேப்டனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.  

Share this story