‘டங்கி’ பட முதல் நாள் கலெக்ஷன்!
1703330902228
ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான ‘டங்கி’ படம் எவ்வளவு தொகையை முதல் நாளில் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் டன்கி. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து டாப்சி, சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை படம் பெறவில்லை. குறிப்பாக பலரும் இது ஷாருக்கான் படம் போல இல்லை என கூறினார்கள்.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி, உலக அளவில் படம் ரூ. 58 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.