'எமர்ஜென்சி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

emergency

கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'.இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார்.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

kangana

இந்நிலையில், பல சிக்கல்களை தாண்டி கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Share this story