பிரபல பாலிவுட் நடிகரின் தாயாருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி !

ameer khan mother

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர் கான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லால்சிங் சத்தா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே தனது குடும்பத்துடன் தீபாவளியை நடிகர் அமீர் கான் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் இருந்தார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. 

ameer khan mother

இந்நிலையில் நடிகர் அமீர் கானின் தாயார் ஜீனத்திற்கு திடீரென நெஞ்சலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

Share this story